• Jan 19 2025

ரசிகையுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகர் அஜித்- இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ?- தல நீங்களா இப்பிடி?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்த திரைப்படத்தை இயக்கிவருகிறார்.இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில், அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது.

 இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அஜர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ளது.இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார். இது ஒருபுறம் இருக்க இன்று அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் என்பதால் துபாயில் குடும்பத்துடன் அஜித் கோலாகலமாகக் கொண்டாடியிருந்தார்


இந்த நிலையில் அவர் துபாயில் ஒரு ரசிகையுடன் ஹோட்டலில் நடனம் ஆடிய வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.அதைப்பார்த்த ரசிகர்கள் தல நீங்களாக இது எனக் கேட்டு வருகின்றனர் .இதற்கு முன்பு துபாய் கடற்கரையில் ஒரு சொகுசு படகில் குடும்பத்துடன் அஜித் செல்லும் வீடியோவும் ட்ரெண்டானது என்பதும் முக்கியமாகும்.



Advertisement

Advertisement