• Sep 26 2023

போடுடா வெடிய.... லியோ படத்தைப் பார்த்த விஜய்- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 week ago

Advertisement

Listen News!


விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து லியோ செகண்ட் சிங்கிள் உட்பட ஆடியோ லாஞ்ச், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகவுள்ளன.

இந்தப் படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட், மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படம் என லியோ மீதான எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இருப்பினும் தற்போது வரை ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்காமல் இருந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக 2ம் சிங்கிள் வரலாம் என தகவல் ஒரு பக்கம் பரவி கொண்டிருக்கிறது.லியோ முழு படத்தையும் தற்போது விஜய் பார்த்து இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. 


அவருக்கு மொத்த படமும் அதிகம் பிடித்து இருக்கிறது என மிஷ்கின் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.இந்த தகவலால் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கிறார்கள். அத்தோடு இப்படத்தைப் பார்த்த மிஷ்கினும் லியோ படம் நன்றாக வந்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்தப் படமும் வெற்றியடையும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement