• May 18 2024

ஜவான் படத்தில் vijay இப்படியொரு கெஸ்ட் ரோலில் தான் நடித்திருக்கின்றாரா?- செம மாஸ் தான்

stella / 9 months ago

Advertisement

Listen News!


ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தார்.இதனை அடுத்து தற்பொழுது ஷாருக்கானை வைத்து ஜவான் என்னு் படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜவான் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


ஜவான் தற்போது செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்த ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதுகுறித்த செய்திகள் வெளியாகியிருந்தாலும் அபிஸியலாக இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை.

 தற்போது மீண்டும் இந்த செய்திகள் வைரலாகி வருகின்றன. அதாவது ஷாருக்கான், அட்லி இருவருக்காகவும் ஜவானில் விஜய் கேமியோவாக நடித்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதாவது விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement