• May 10 2024

விஜய்யை வைத்து இயக்கவில்லை-அலறியடித்து ஓடிய டான் இயக்குநர்- என்ன ஆச்சு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லியின் துணை இயக்குநராக இருந்தவர் தான் சிபி சக்கரவர்த்தி. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இப்படம் வெளியாகி இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனால் இவர் அடுத்ததாக பெரிய நடிகர் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், சிபி சக்கரவர்த்தி சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து அவருக்கு ஒரு சூப்பரான கதையை சொல்லி ஓகே செய்து விட்டார் என்றும், தளபதி 67 படத்தைத் தொடர்ந்து தளபதி 68 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.

இது குறித்து சிபிச்சக்கரவர்த்தி ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். இப்போது தான் அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறேன். கதை பணிகள் முடிந்த பிறகு தான் அந்த கதைக்கு யார் சரியாக வருவார் என்பதை முடிவு செய்து அந்த ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே செய்ய வேண்டும்.

நடிகர் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதற்கான சமயம் வரும் போது கட்டாயம் பண்ணுவேன், ஆனால், தற்போது வெளியாகி இருப்பது வதந்தி தான் என விளக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement