• May 19 2024

என்னை விட என்மீது அதிக அன்பு கொண்டவர் தனுஷ் தான்- ஆடியோ ரிலீசில் அனிருத் நெகிழ்ச்சி!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ், நடிப்பில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் தனுஷின் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இதுவரை படத்திலிருந்து 4 பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனிடையே நேற்றைய தினம் தனியார் கல்லூரி ஒன்றில் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் வேட்டி சட்டையில் வந்து அனைவரையும் கவர்ந்திருந்தனர்

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், தன்னுடைய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் தனுஷ் என்றும் தன்னைவிட தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவர் தனுஷ் என்றும் தெரிவித்தார். அனிருத் கூறியது போல தன்னுடைய 3 படத்தில் தான் அனிருத்திற்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தார் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement