• Apr 27 2024

நடிகை ரோஜாவின் மகளுடன் ஜோடி சேரும் துருவ் விக்ரம்- ஆனால் அது தமிழ் படம் இல்லையாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கயிமான நடிகராக வலம் வருபவர் தான் விக்ரம். மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் அண்மையில் வெளியாகியிருந்த கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதோடு வசூலிலும் பின்னடைவைச் சந்தித்தது.

இதனை அடுத்து இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது.மேலும் இவரது மகன் துருவ் விக்ரமும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.


அதனைத் தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மஹான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது விக்ரம், துருவ் விக்ரமை நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து அதற்காக கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜாவின் மகளைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement