• Apr 15 2025

பணம் இல்லாது தவித்த இயக்குநருக்கு உதவி செய்த தனுஷ்..! திரையுலகை நெகிழவைத்த சம்பவம்!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் முன்னணியில் இருக்கும் தனுஷ், தற்போது ஹிந்தியில் "தேரே இஷ்க் மெயின்" என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஆனந்த் எல். ராய் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தனுஷிடம் குபேரா , இட்லி கடை போன்ற பல திரைப்படங்கள் உள்ளன. இத்தகைய பிஸியான சூழலிலும் தனுஷ் மனிதநேயத்திற்கு முன்னிலை கொடுத்த ஒரு சம்பவம் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சமீபத்தில் தனுஷை வைத்து படம் இயக்கிய ஒரு இயக்குநர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்போது அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சையின் முடிவில், மருத்துவர்கள் சுமார் ரூ. 25 லட்சம் தேவை எனக்கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இத்தொகையை கொடுக்க முடியாமல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் நெருக்கடியில் காணப்பட்டனர். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியில் தனுஷை தொடர்பு கொண்டனர். தங்கள் நிலையை வெளிப்படையாக தெரிவித்தனர். இதற்கு தனுஷ் உடனடியாக தான் அந்தப் பணத்தை செலுத்துவதாக அந்த இயக்குநரின் குடும்பத்தினருக்கு கூறியுள்ளார்.

தனுஷின் இந்த செயலைப் பற்றிய தகவலை, தமிழ் சினிமாவின் பத்திரிகையாளர் அந்தணன் தன்னுடைய சமீபத்திய பதிவு ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தனுஷின் சிறந்த மனிதநேயத்தையும், அவர் தொழில்துறையை நன்கு நேசிக்கும் மனநிலையையும் வெளிப்படுத்துகின்றது எனவும் கூறியுள்ளார். இந்த நிகழ்வின் மூலம் தனுஷ் மற்ற நடிகர்களுக்கு முன்மாதிரியாக காணப்படுகின்றார்.

Advertisement

Advertisement