• Apr 01 2025

தனுஷ் கையை பிடித்து ஓட்டமெடுக்கும் ராஷ்மிகா.. வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பை ரகசியமாக வீடியோ எடுத்த மர்ம நபர் ஒருவர் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வீடியோவில் தனுஷின் கையை பிடித்துக் கொண்டு ராஷ்மிகா மந்தனா ஓடும் காட்சிகள் உள்ளன.

நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் தான் அவரது காட்சியின் படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் பான் - இந்திய திரைப்படமாக இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அதில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டனர். இருவருக்கும் ஆன ரொமான்ஸ் கட்சியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் இந்த படப்பிடிப்பை ரகசியமாக தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.

ஒரு சில நொடிகளே இருக்கும் இந்த வீடியோவில் தனுஷின் கையை பிடித்துக் கொண்டு ராஷ்மிகா ஓட்டம் எடுக்கும் காட்சி உள்ளது. இருவரும் ஏன் ஓடுவது போன்ற காட்சி எடுத்தார்கள் என்பது புரியவில்லை என்றாலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement