• Jan 18 2025

அன்பே வா: வருணிற்கு நடந்த திடீர் கல்யாணம்! ஆனா பூமிகா மணப்பெண் இல்ல! பரபரப்பில் குடும்பத்தினர்

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

இது வரை பல நாடகத்தொடர்கள்  வந்திருந்தாலும் பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடும் நாடகங்கள் ஒருசிலதே ஆகும். சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘அன்பே வா’. இந்தத் தொடரின் நாயகன் வருணிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.


 இந்த சீரியல் 2020 ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்றுவரை வெற்றிகரமாக பரபரப்பாக செல்லும் இந்த நாடகத்தில் வருண் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விராட் ஆவார். இந்த சீரியலில் நடித்ததால் விராட்டிற்கெனத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம்.


இந்த நிலையிலேயே இவர் நவீனா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இன்றைய தினம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். மற்றும் குறித்த திருமணத்தில் வருணின் குடும்பத்தினர் பரபரப்பாக வேலை செய்து அனைவரையும் நன்கு கவனித்திருந்தனர். இவரது மனைவியான  நவீனா ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement