• Jan 19 2025

பூட்டப்பட்ட அறையில் கண்டெடுக்கப்பட்ட பிரபல இயக்குநரின் சடலம்! சினிமா பாணியில் நடந்த திகில் சம்பவம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் மிழிஇதழில் கண்ணீருமாய் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரகாஷ்  கொலேரி.

இந்த நிலையில், மலையாள பிரபலமான இயக்குநர் பிரகாஷ்  கொலேரி அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில் பிரபலமான இயக்குநராக காணப்பட்ட  பிரகாஷின் மறைவு, திரை உலகிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது.

கேரளா மாநிலம் வயல்நாட்டில் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் இயக்குனர் பிரகாஷ். 65 வயதான இவர், கடந்த இரண்டு நாட்களாக தனது வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.


இதன் காரணமாக சந்தேகப்பட்ட அயலார், அவருடைய வீட்டுக் கதவை முதல் தட்டி பார்த்தபோதும் எந்த சத்தமும் வரவில்லை. அதற்குப் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்கள்.

இதன் போது அங்கு பிரகாஷ் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அதை அடுத்து அயலார் போலீசுக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.


இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ், அவரது உடலை கைப்பற்றியதோடு, அவரது உயிரிழப்பு தொடர்பில் பல கோணங்களிலும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தற்போது இவரது மறைவிற்கு திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இதே வேளை இரண்டு நாட்களாக உயிரிழந்து கிடந்த பிரகாஷின் மரணம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement