• Nov 07 2025

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்து ! வேட்டையன் OTT வெளியிட்டு திகதி அறிவிப்பு..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்,மஞ்சுவாரியார்,பகத்பாசில்,அமிதாப்பச்சன்,ராணா போன்ற பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் பட்டையை கிளப்பி வரும் வேட்டையன் திரைப்படமானது ஜெய் பீம் பட புகழ் ஞானவேல் இயக்கத்தில் போலீஸ் கதைக்களத்தினை மையமாக கொண்டு உருவாகி அக்டோபர் 10ஆம் திகதி வெளியாகி இருந்தது. 


ஏறத்தாள 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேலான வசூல் சாதனை பெற்று வருகிறது.இப் படத்தை திரையரங்கில் கண்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என கேட்டுக்கொண்டே இருந்தனர். 


இப்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.திரையரங்குகளில் மாஸாக வெளியாகி கலக்கி வரும் ரஜினியின் வேட்டையன் படம் வரும் நவம்பர் மாதம்  8ஆம் திகதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement