• May 10 2024

என் EX இப்ப வரைக்கும் கெஞ்சிட்டு இருக்காரு-தனது காதல் குறித்து ஓபனாக பேசிய தர்ஷா குப்தா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கொரோனா லாக்டவுன் சமயத்தில் இன்ஸ்டாகிராமில் இஷ்டத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசியதன் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர் வட்டமும் பெரிதானது. பின்னர் சீரியல்களில் நடிக்கத்தொடங்கிய தர்ஷாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷாவுக்கு அதன்பின் மக்கள் மத்தியில் செம்ம ரீச் கிடைத்ததோடு, சினிமாவிலும் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அந்த வகையில் தர்ஷா குப்தா முதன்முதலில் நடித்த திரைப்படம் ருத்ரதாண்டவம். மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா.


இதையடுத்து சினிமாவிலும் கவர்ச்சி ரூட்டில் களமிறங்கிய தர்ஷா, அடுத்ததாக ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் கிளாமர் ரோலில் நடித்தார். இதில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார் . இதையடுத்து யோகிபாபு உடன் மெடிக்கல் மிராக்கிள் என்கிற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார் .


சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்திருந்தார். அதில் என்னோட எக்ஸ் லவ்வர் திரும்பவும் என் கிட்ட கேட்டிட்டே இருக்காரு. ஆனால் நான் ஏற்றுக் கொள்ளப் போவதாக இல்லை. ஒரு தடவை அந்த நம்பிக்கை போயிடுச்சு என்றால் திரும்ப வராது. எனக்கு வரப்போறவர் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை உண்மையாக இருக்கணும். அந்த உண்மையில்லை என்றால் அந்த ரிலேசன்சிப் சரிவராது என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement