• May 08 2024

டி.ராஜேந்திரனின் 'பத்து தல' வெர்ஷன்- இத்தனை ரைமிங் வசனங்களா?- இரசிச்சுக் கை தட்டிய சிம்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

 சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா  சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு அரங்கு முழுவதும் ரசிகர்கள் கூடி நின்று கத்திக் கூச்சலிட்டனர். அத்தோடு சிம்புபுவும் வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார்.


அத்தோடு இவ் விழாவிற்கு ப்ரியா பவானி ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமார், கௌதம் கார்த்திக் சிம்புவின் பெற்றோர் என ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் மேடையில் பேசிய சிம்புவின் அப்பாவும் நடிகருமான டி.ராஜேந்தர் எனக்கு  பத்து தல ரொம்ப பிடிக்கும். எனக்கு இப்படிப் பெசுவது கைவந்த கலை என்னுடைய மகனுக்கு கற்றுத் தந்தேன் நடித்தல படித்தல ஆடுதல நாடுதல ஓடுதல வசம் சொல்லு தல வாழ்க்கையில் வெல்லு தல வெற்றி நடைபோடு தல வசூலில் அள்ளு தல மக்கல மதித்தல இறைவனை துதித்தல என ரைம்மிங்காக பேசியுள்ளார். அத்தோடு இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement