• May 17 2024

அருண் விஜய்யின் யானை திரைப்படத்தின் வசூல் விவரம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், அவரது இயக்கத்தில் தற்பொழுது வெளியாகிய திரைப்படம் யானை. இத்திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார். கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.

இவர்களோடு சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

குடும்பம்,காதல் சென்டிமென்ட் கொண்ட திரைப்படத்தில் அருண் விஜய் கனகச்சிதமான நடித்துள்ளார். அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை.. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற வழக்கமான ஹரியின் கதை தான் யானை. இந்த கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் சமமாக உள்ளது.

நாயகன் குடும்பம் சந்திக்கும் பிரச்னை ஜூலை 1ந் தேதி வெளியான திரைப்படத்தில் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு இருந்து வருவதால் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக்கொண்டு இருக்கிறது.

படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆன நிலையில் நல்ல வசூல் வேட்டை தான்.தற்போது வரை படம் தமிழகத்தில் ரூ. 16 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் பெரிய நடிகரின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் இப்படம் மேலும் சில வாரங்கள் நல்ல வசூலை ஈட்டும் என்கின்றனர்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement