• Oct 31 2024

கோட் படத்தின் OTT உரிமை கோடிக்கணக்கில் விற்பனை? அதிர்ச்சித் தகவல்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் இளைய தளபதி விஜய். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான லியோ படம் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இதை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார் இளைய தளபதி.

மேலும், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 


கோட் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் என இரண்டு இடங்களிலும் மாறி மாறி தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோட் படத்தில் தென்னிந்திய மொழிகளின் ழுவுவு உரிமை ரூ 125 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும், இந்தி மொழியின் ரைட்ஸை தனியாக விற்பனை செய்யவும் படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 


Advertisement