• Jan 18 2025

அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள பவதாரிணி உடல்... கார்த்திக், விஜய் ஆண்டனி உட்பட திரண்டு வந்த பிரபலங்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் காலமான இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த, பல்வேறு பிரபலங்களும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு நிற்கின்றார்கள்.


அதன்படி, மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் திநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தி.நகர் இல்லத்திற்கு பவதாரிணி உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாம்.


இந்நிலையில் பல பிரபலங்கள் அஞ்சலிக்காக வந்த வண்ணம் இருக்கின்றனர். நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் அவரது மனைவி, மன்சூர் அலிகான், நடிகர் பிரேம்ஜி, நடிகர் கார்த்திக், விஜய் ஆண்டனி என பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். இதேவேளை, பவதாரிணியின் இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடைபெறும் நிலையில் இளையராஜா தேனிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Advertisement

Advertisement