• Apr 27 2024

கௌரவம் பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது- கிண்டலடித்த கஞ்சா கறுப்புக்கு பதிலடி கொடுத்த இளம் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபல்யமான நடிகராக வலம் வருபவர் தான் கிஷோர். இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மஞ்சக்குருவி. இயக்குநர்  அரங்கன் சின்னத்தம்பி இயக்கியிருக்கும் இப்படத்தினை வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கின்றார்.

 இந்த படத்தில் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா என பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ப்ரமோஷன் பணிக்காக இப்படத்தின் கதாநாயகி நீரஜா போஸ்டர் ஒட்டும் ஃபோட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


 இப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய நகைச்சுவை  நடிகர் கஞ்சா கருப்பு, “இந்த படத்தில் நான் சில காட்சிகளை நடித்துள்ளேன், ஹீரோயினும் நான் நடித்த சில காட்சிகளில் இடம்பெற்றார். ஆனால் அவருக்கும் கேமரா மேனுக்கும் எப்படி லவ் வந்தது என தெரியவில்லை. ஆனாலும் லவ் பண்ணுங்க. கல்யாணம் பண்ணுங்க.. நடிப்பை விட்டுவிடாதீர்கள். நிறைய நடித்து கல்லாவை நிரப்புங்கள். இந்த பெண்ணுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஏனென்றால் தன் படத்துக்காக போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்கிறார். நான் படம் பண்ணினேன்., என் பட ஹீரோயின் எல்லாம் ஆப்பிள் ஜூஸ் தான் கேட்டார்” என கலகலப்பாக பேசினார்.

பின்னர் இதுகுறித்து பேசிய இப்பட நடிகை நீரஜா, “எல்லா வேலையும் கஷ்டம்தான்.. போஸ்டர் ஒட்டுவது ஒன்றும் ஈஸி அல்ல. நிறைய படங்களின் பின்னணியில் போஸ்டர் ஒட்டும் பணி நடக்கிறது. அதை நாம் பெரிதாக பார்த்ததில்லை. நான் ஒன்றும் செய்துவிடவில்லை. நம் படத்துக்கு நாம் ப்ரமோஷன் பண்ணியிருக்கிறோம். கௌரவம் பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது.


ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறிய முயற்சியாகவே இதை செய்தேன்! என்னை பொறுத்தவரை ஒரு படம் முடிந்தவுடன் நம் வேலையை பார்த்து போக முடியாது. அது என் கேரக்டர் இல்லை. அந்த படக்குழுவினருடன் பயணித்து அவர்களின் வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினேன். பொண்ணுங்க ஃப்ளைட்டே ஓட்டுறாங்க.. நான் போஸ்டர் ஒட்டியது பெரிய விசயம் எல்லாம் இல்லை” என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement