• May 11 2024

அண்ணாவை பார்க்க முடியுமா?"- இமயமலையில் ரசிகர் வைத்த கோரிக்கை- உடனடியாக நிறைவேற்றிய அஜித்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் அண்மையில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது 61வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு மீண்டும் தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.


இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பயணித்தார். இதனை அடுத்து அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களை அஜித்தின் நண்பரும் சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.


இந்த இன்ஸ்டாகிராம் பதிவில்,  திருத்துறைப்பூண்டியை சார்ந்த பாலா எனும் ஒரு ரசிகர், "அண்ணா இப்போ நான் லடாக்ல தான் இருக்கேன். டிவிஎஸ் 50 வண்டில வந்தேன். அஜித் அண்ணாவை பார்க்க முடியுமா?" என கோரிக்கை வைத்தார்.

இந்த கமெண்டை பார்த்த சுப்ரஜ் வெங்கட்,  நடிகர் அஜித்தை ரசிகர் பாலா சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அஜித்துடன் பாலா எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.‌


Advertisement

Advertisement

Advertisement