• Apr 27 2024

துணிவு பட லேட்டஸ்ட் அப்பேட்- ரீசென்ட் புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


‘நேர்கொண்ட பார்வை , வலிமை’ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து போனி கபூர், அஜித் கட்டணியில்  மூன்றாவது முறையாக தயாராகிவரும் திரைப்படம் ‘துணிவு’.இப்படத்தினை எச்.வினோத் தான் இயக்கி வருகின்றார். இதனால் இப்படத்தின் மீதான எதர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

அதுவும் அஜித்தின் இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என இரு வேடத்தில் நடித்துள்ளார். படம், வரும் பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அஜித் குமார் மற்றும் போனி கபூர் இருவரும் துணிவு பட படப்பிடிப்பில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. 


அண்மையில் இந்த படத்தில் தனது போர்ஷனுக்கான  டப்பிங் பணிகள் நிறைவு பெற்றாதாக நாயகி மஞ்சு  வாரியர் புகைப்படத்துடன் கூறியிருந்தார். அதே போல அமீர் மற்றும் பாவனியும் தாம் டப்பிங் செய்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தனர்.

மேலும் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதோடு வங்கிக் கொள்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டதால் இப்படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது எனலாம்.


Advertisement

Advertisement

Advertisement