• Jan 18 2025

பிக்பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா வெளியிட்ட முதல் வீடியோ- இது என்னுடைய வெற்றி இல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளாராம்.இரண்டாம் இடத்தை மணியும் மூன்றாம் இடத்தை மாயாவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. மேலும் மாயா டைட்டில் வின்னர் ஆகக் கூடாது என்றும் சிலர் கூறி வந்தனர்.


மேலும் டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு ரூ 2.25 லட்சம் பேசப்பட்டதாம்.அதே போல பரிசுத் தொகையாக 50 லட்சம் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னரான அர்ச்சனா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வாக்களித்த மக்களுக்கு நன்றி, வைல்ட்காட்டாக போகும் போது இரண்டு வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிடுவேன் என்று பயந்து பயந்து தான் போனேன்.அத்தோடு பிரதீப்புக்காக நான் குரல் கொடுத்த போது மக்கள் நீங்க தான் எனக்கு சர்ப்போட் பண்ணினீங்க.


இந்த வெற்றி நான் பிரதீப்பின் வெற்றியாகத் தான் கருதுகின்றேன். மேலும் நான் பிஆர் வைத்து விளையாடல மக்களுடைய சர்ப்போட்ல தான் உள்ளே போனேன். அதே மாதிரி டைட்டில் வின்னர் ஆனேன். எனக்கு சர்ப்போட் பண்ணின எல்லோருக்கும் நன்றி. அந்த வெற்றி பிரதீப் ப்ரோவுக்கு சமர்ப்பணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement