• Jan 18 2025

பிக்பாஸ் ரவீனாவுக்கு அடித்த புதிய அதிஷ்டம், அடடே இப்படியொரு வாய்ப்பா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளாராம்.இரண்டாம் இடத்தை மணியும் மூன்றாம் இடத்தை மாயாவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு ரூ 2.25 லட்சம் பேசப்பட்டதாம்.அதே போல பரிசுத் தொகையாக 50 லட்சம் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.


மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கி போட்டியாளராகக் கலந்து கொண்டவர் தான் சின்னத்திரை நடிகை ரவீனா.இவர் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்தாலும் மணியும் நெருக்கம் காட்டியதாலும் காதல் சர்ச்சைகளில் சிக்கியதாலும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்.


நடிப்பைத் தாண்டி நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர், பல ரியாலிட்ரி ஷோக்களில் நடனமும் ஆடி இருக்கின்றார். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது இவருக்கு விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள ரியாலிட்ரி ஷோவான ஜோடியிலும் நடனமாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement