• May 18 2024

இதுவரை பார்க்காத வகையில் ரெடியான பிக்பாஸ் செட்- கசிந்த புகைப்படங்கள் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.உலகலாவிய ரீதியில் ரசிகர்களை கொண்ட இந்நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனில் காலெடி எடுத்து வைக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்துவார் என்று பார்த்தால் கமலே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகின்றது.இந்த நிகழ்ச்சியானது பிக் பிரதர் எனும் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது..இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகின்றது.


இது மேலை நாடுகளில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்னும் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 6 வருகின்ற அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் ரக்ஷன், தர்ஷா குப்தா, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தொகுப்பாளர் டிடி, ஜிபி முத்து, காமெடி நடிகர் மதுரை முத்து போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே உள்ளது.விரைவில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.


எனினும் இந்த நிலையில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்ற குறித்த ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ப்ரோமோவில் காடுகளைப் பற்றியும், விலங்குகளை பற்றியும் கமலஹாசன் பேசியிருந்தார். எனவே வீடும் அப்படிப்பட்ட ஒரு செட்டப்பில் தான் இருக்கிறது. அந்த புகைப்படத்தை பாருங்கள்.


Advertisement

Advertisement