• Jan 18 2025

அர்ச்சனாவுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்த பிக்பாஸ் ஐஸு- இப்போ தான் திருந்தியிருக்கிறாங்க- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இனிதே முடிவடைந்தது. பிரபல நடிகை VJ அர்ச்சனா இந்த சீசனின் வெற்றியாளராக மாறியுள்ளார். 

அது மட்டுமல்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 9 போட்டியாளர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதில் "கேம் சேஞ்சர்" என்ற விருது தினேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல "ஸ்போட்டிவ்" என்ற விருது மணிக்கும் "Determined" என்கின்ற விருது பூர்ணிமாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.


அதே போல "செல்ஃப் மேட்" என்ற விருது நிசனுக்கும், "ரைசிங் ஸ்டார்" என்ற விருது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் வெற்றியாளராக மாறியுள்ள அர்ச்சனாவிற்கும், "இன்ஸ்பிரேஷனல்" என்ற விருது தமிழ் திரை உலகின் மூத்த நடிகையான விசித்ரா அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டது ஒரு புறம் இருக்க இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. எனவே பிரதீப் பதிவு ஒன்றினை் போட்டு அர்ச்சனாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில் ஐஸுவும், பிக்பாஸ் வீட்டிற்குள் தான் அர்ச்சனாவுடன் சண்டை பிடித்த சீனை ரீல்ஸ் செய்து வீடியோவாக வெளியிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement