• Apr 27 2024

பிக்பாஸ் நான் தான் பொண்டாட்டிகிட்டயே இதை பண்ணமாட்டேன்- ரகசியதைத்தை அம்பலமாக்கி சீரியல் நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் அமித் பர்கவ். இவர் மகாபாரதம், நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை, கண்மணி ,திருமதி ஹிட்லர் எனப் பல சீரியல்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர். இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்திருந்தார். அதில் பிக்பாஸ் குறித்து சில விடயங்கள் குறித்து பேசியிருந்தார். அந்த வகையில் அவர் அசீம் பற்றி பேசும்போது அசீம் ஒரு நல்ல மனிதர் கம்பீரமாக குரல் வளம் உடையவர். நன்றாகக் கவிதை எழுதுவார் ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே ஏன் இப்படி இருக்கின்றார் என்று தெரியவில்லை. வெளில அவர் வேற மாதிரி தான் இருந்துள்ளார் என்றார்.


அதே போல மைனா நந்தினி பற்றிக் குறிப்பிடும் போது மைனா வெளில இருக்கிறமாதிரி தான் ஜாலியா இருக்கிறாங்க எந்த வொரு பாஃமிலி சர்ப்போட்டும் இல்லாமல் தான் மீடியாவுக்குள்ளே நுழைந்திருக்கிறாங்க அவங்க வாழ்க்கைல நடந்தது எல்லாம் கேட்டா ரொம்ப கஷ்டமா இருக்கும் அவ ஒரு நல்ல பொண்ணு அதே போல தான் அமுதவாணனும் தன்னுடைய கேமை சரியா விளையாடுறாரு தனக்கென ஒரு பிரச்சினை கண்டிப்பாக விடமாட்டார் என்றும் கூறினார்.

அதே போல நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறிய அசல் குறித்து பேசும் போது அசல் பண்ணினது ரொம்ப தப்பு சும்மா இருக்கிற பொண்ணுங்க கிட்ட இப்படிப் பண்ணக் கூடாது. நான் என் பொண்டாட்டி கிட்டயே இப்படி பண்ண மாட்டேன்.ஆனால் அந்த பையன் என்ன என்றால் யாரென்றே தெரியாத பொண்ணுங்களை தடவிட்டு இருக்கிறான். அவனோட செயல் எனக்கு பிடிக்கவே இல்லை எனக் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசும்போது கன்னட பிக்பாஸ்ல நான் தான் குரல் கொடுத்தேன். அங்க தமிழ் பிக்பாஸ் மாதிரி இல்ல ரொம்ப கண்டிப்பா பேசணும் அதற்கே நிறைய ரூல்ஸ் இருக்கு அதை என்னால பண்ண முடியாமல் தான் அதிலிருந்து விலகினேன். என்னை தமிழ் பிக்பாஸிற்குள் வர சொல்லி இன்னும் கூப்பிடல அப்படி கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் அங்க போய் ஏதாவது ஒன்று பேசினால் கூட அது வேற மாதிரி ஆகிடும் அதனால அங்க போகவே மாட்டேன் எனக் கூறினார்.


மேலும் ஜி.பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய போவார் என்று எதிர்பார்க்கல அவர் பணம் புகழை விட குடும்பம் தான் என்று முடிவெடுத்துப் போனார். இதனால் இப்பவே அவர் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.இருந்தாலும் அவர் இன்னும் கொஞ்ச நாள் வீட்டுக்குள்ள இருந்திருக்கலாம். ஏன் என்றால் குடும்பம் அங்க தானே இருக்க போகுது அவருக்கு கண்டிப்பா சர்ப்போட் பண்ணுவாங்க. அப்படி இருக்கும் போது அவங்க உள்ளே  இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.கண்டிப்பாக அவர் வைல்ட் காட் என்ட்ரிாக வந்தால் கூட ஆட்டம் வேற மாதிரி தான் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement