• May 09 2024

வீட்டை இரண்டாக்கி... ஹவுஸ்மேட்ஸை கோர்த்து விடும் பிக்பாஸ்... ஆரம்பமாகப்போகும் சண்டை..? பரபரப்பான ப்ரோமோ வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 7வது ஆண்டாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பல துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டு நேற்றைய தினம் ஆட்டம், பாட்டத்துடன் ஆரம்பமாகி இருக்கின்றது. மேலும் இந்த முறை, இரண்டு பிக்பாஸ் வீடு இருந்தாலும், இரண்டு வீட்டுக்கும் ஒரே வாசல், ஒரே சமையலறை மட்டுமே உள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் வீட்டின் முதல் வாரத்தலைவராக இருக்கும் விஜய் வர்மாவைக் கவராத போட்டியாளர்கள் என ரவீனா, வினுஷா, நிக்சன், ஐசு, அனன்யா, பவா செல்லத்துரை ஆகிய 6 போட்டியாளர்களின் அறிவிக்கப்பட்டு இன்னொரு வீட்டுக்கு(small house) அனுப்பி வைக்கப்படுகின்றனர். 


இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் "ஒவ்வொரு வாரமும் 6ஹவுஸ்மேட்ஸ் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிய வீட்டுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள், அந்த 6பேரும் பின்வரும் விதிமுறைகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்" எனக் கூறப்படுகின்றது.


அதாவது "சிறிய வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லக்கூடாது, எந்த டாஸ்க்கிலும் பங்கு பெற கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது, 3வேளைக்கான மெனுவை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்வார்கள், அதைத்தான் அவர்கள் சமைக்க வேண்டும், பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ் கிளீனிங் மற்றும் பாத்ரூம் கிளீனிங் வேலைகளை சிறிய வீட்டில் இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும்" போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது. 


எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது முதல் வாரத்திலேயே ஹவுஸ்மேட்ஸ்க்குள் சண்டை வரப்போவது கன்போர்ம் என்பது தெளிவாகின்றது.  


Advertisement

Advertisement

Advertisement