• Feb 02 2023

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சுத்தமாக கிரியேட்டிவிட்டி கிடையாது- மோசமாகத் திட்டித் தீர்க்கும் வனிதா

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 வீட்டில் வார, வாரம் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் சூப்பராக விளையாடி வருகின்றனர்.அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேறினார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் குறித்து ரிவியூ கொடுத்து வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸின் கிரியேட்டிவ் டீம் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது 


 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கிரியேட்டிவாக இருக்க வேண்டும். மேலும் போட்டியாளர்களுக்கு கிரியேட்டிவிட்டி சுத்தமாக இல்லை. சத்தியமா சுத்தமாக இல்லை. இனிமேல் பேப்பேர் போட்டு, டே எஃபெக்ட், நைட் எஃபெக்ட் போட்டு எங்க சினிமாவில் வருவது மாதிரி சீன் பேப்பரை டயலாக்குடன் கொடுத்தால் தான் பேசுவாங்க போன்று என்றார்.


வனிதா விஜயகுமார் கூறியதை கேட்டவர்களோ, அக்கா சொல்வது மிகச் சரி. பணம் செலவு செய்தால் மட்டும் போதாது. கொஞ்சமாக கிரியேட்டவாக இருக்க வேண்டும். பிற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் நடப்பதை காப்பியடிப்பதையும் நிறுத்த வேண்டும். யோசிக்கவே தெரியாத ஆட்களையா பிக் பாஸ் கிரியேட்டிவ் டீமில் வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி உருப்படாது எனத் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement