• Apr 27 2024

படு மோசமான உடையணிந்து... கவர்ச்சி வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்... திக்கு முக்காடிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஒருவரே ஷிவானி. பின்னர் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.



அந்தவகையில் ஷிவானி நடிப்பில் முதன்முதலாக வெளிவந்த படம் என்றால் அது 'விக்ரம்' தான். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார் ஷிவானி. குறிப்பாக இப்படத்தில் அவர் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அவரின் நடிப்பிற்கு தியேட்டர்களில் விசில் பறந்தது. அந்த அளவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இவருக்கு உள்ளது.



விக்ரம் படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய 'வீட்ல விசேஷம்' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடி அனைவரையும் கவர்ந்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பில் பம்பர் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் மூலம் முதன்முதலாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள அவர், இதில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.



இவை மட்டுமல்லாது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திலும், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் படு கவர்ச்சி வேடத்திலும் நடித்துள்ள ஷிவானிக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளுக் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கான முக்கிய காரணமே அவர் காட்டுகின்ற கவர்ச்சி தான்.

அந்த வகையில் தற்போதும் கறுப்பு நிற கிளாமர் உடையணிந்து கவர்ச்சி காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவரின் கவர்ச்சியில் மயங்கி திக்கு முக்காடி உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement