• May 04 2024

பிக்பாஸ் 6 ரசிகர்களுக்கு இந்த வாரம் காத்திருக்கும் ஒரு சூப்பர் சர்ப்ரைஸ்- வாஃவ் இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து ரச்சிதா மகாலட்சுமி நேற்று வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இந்த சீசனின் கடைசி நாமினேஷன் ப்ராசஸ் துவங்கியிருக்கிறது. நாமினேஷன் என பிக் பாஸ் சொன்னதுமே, அசீம் பெயரை அனைவரும் தெரிவித்து நாமினேஷன் செய்திருந்தனர்.

மேலும் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியானது 14ம் வாரத்தை எட்டியுள்ளது இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய வாய்ப்பு உள்ளது.அத்தோடு இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


தற்போது பிக்பாஸ் வீட்டில் புதிய டுவிஸ்ட் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் 6 வீட்டில் இதற்கு முன் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற முக்கியமான சிலர் வரப்போகிறார்களாம்.வரும் வாரத்தில் ரசிகர்களுக்கு நிறைய இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த வாரம் முழுவதும் சுவாரஸியத்திற்கு குறைவிருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.அத்தோடு இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement