• Apr 27 2024

''ரசிகர்களுக்கு பெரிய விருந்து'' - துணிவு FDFS பார்த்த நடிகர் அருண் விஜய் வைரல் ட்வீட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று  அதிகாலை 1.00 மணிக்கு  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது.

நடிகர் அஜித்குமார்-  எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

அத்துடன் ,இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



மேலும் ,இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துணிவு  படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகிய நட்சரத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.



இந்நிலையில் நடிகர் அருண் விஜய், தனது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தினை பார்த்து விட்டு, "அஜித் குமார் சாரின் தெறிக்கும் SWAG!!💥💥 ரசிகர்களுக்கு பெரிய விருந்து... ஆக்சன்.. திரைக்கதை.. நடிப்பு.. அருமையான கருத்து...👌🏾👌🏾 #துணிவு 💥💥💥 #HVinoth மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்...👍🏽" என அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார்.

தற்போது இந்த ட்வீட்  ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக  வைரலாகி  வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement