• May 13 2024

பிரபல இயக்குநர் படத்தில் இணைந்து நடிக்கும் பாவனா மற்றும் கவுதம் மேனன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை பாவனா. இவர் தமிழ் ,கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்திருக்கின்றார்.

கேரளா நடிகையான இவர் கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ஆதம் ஜாண் படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். மீடியாக்களிடமும் வெளிப்படையாக பேசாமல் இருந்தார்.

இந்நிலையில் மலையாளத்தில் தொண்ணூறுகளில் மோகன்லாலின் ஸ்படிகம், மம்முட்டியின் ஐயர் தி கிரேட் உள்ளிட்ட பல கமர்சியல் படங்களை இயக்கியவர் இயக்குனர் பத்ரன்.

அத்தோடு கடந்த 17 வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த பத்ரன் மீண்டும் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார் படத்திற்கு யோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை பாவனா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் இளம் நடிகர் ஷேன் நிகம் ஆகிய மூவரும் நடிக்கின்றனர். இதில் பாவனா நடிகையாகவே நடிக்கிறார் என்றும் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு பாவனா மலையாளத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement