• May 18 2024

'பொன்னியின் செல்வன்' பிரபலங்களை சந்தித்த பாவனா... அடடே இவங்களும் இருக்காங்களா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். அதிலும் இவர் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் இணைந்து வழங்கிய நிகழ்ச்சிகள் யாவும் இன்றும் பலராலும் மறக்க முடியாது.


இவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும்  கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றுவது என தன்னுடைய திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார்.


அத்தோடு சிறந்த பரத நாட்டிய கலைஞரான இவர் அடிக்கடி பரதம் ஆடும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

மேலும் 37 வயத்தினைக் கடந்து விட்ட இவர் அடிக்கடி தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் விதமாக இறுக்கமான உடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றுவதையும் வாடிக்கையாக செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் நடிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனைத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அதில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு உட்படப் பலரும்  பாவனாவுடன் இணைந்து உள்ளனர். 


மேலும் இப்புகைப்படமானது படத்தினுடைய ப்ரோமோஷன் நிகழ்வின் போது எடுக்கப்பட்டதாகும். இப்புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

Advertisement

Advertisement