• Apr 27 2024

பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் சீனில் கலந்து கொண்ட ஏராளமான பிரபலங்கள்- என்னது சீசன் 2 வரப் போகின்றதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு குடும்பத்தினரையும், கண்ணம்மா உட்பட யாரையும் அண்மையில் அடையாளம் தெரியாமல் போனது.

அதன் பின்னர் மருத்துவர் பாரதியின் ஆழ்மனதில் கண்ணம்மா பெயர் ஆழமாக பதிந்திருக்கிறது, ஆனால் கண்ணம்மாவை நேரில் பார்க்கும்போது அவருக்கு யார் என்று தெரியவில்லை, எனினும் பாரதிக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் கண்ணம்மா தான் உதவி செய்ய வேண்டும் மீண்டும், அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும், கண்ணம்மா பாரதியுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். முடிந்தால் பாரதியின் பழைய நாட்களுக்கு, அதாவது கண்ணம்மாவை பாரதி காதலித்த நாட்களுக்கு சென்று பழைய காட்சிகளை மீண்டும் ரீகிரியேட் செய்தால், பாரதியின் பழைய எல்லா நினைவுகளும் அவருக்கு நினைவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டது.


இதனால் கண்ணம்மா முயற்சி செய்து ஒரு வழியாக மீண்டு வந்த பாரதியை கண்ணம்மா ஏற்றுக்கொண்டு தானும் அவருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததை அடுத்து, விவாகரத்தான இவர்களுக்கு திரும்பவும் திருமணம் செய்ய அனைவரும் ஆலோசிக்கின்றனர். இதற்கு பாரதி & கண்ணம்மா இருவருமே சம்மதிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த திருமண விசேஷத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பிக்பாஸ் சினேகன், சீரியல் நடிகை கன்னிகா, பிக்பாஸ் 6வது சீசனில் புகழ்பெற்ற ஷிவின் கணேசன், பிக்பாஸ் முந்தைய சீசன் போட்டியாளரும் பாரதி கண்ணம்மாவில் ஒரு கேரக்டருமான தாமரை செல்வி ஆகியோர்  கலந்துகொள்ளும் ஃபோட்டோக்களும் வீடியோவும் வைரலாகி வருகின்றன. இதேபோல் இத்துடன் இந்த சீரியலின் முதல் சீசன் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் பாரதி கண்ணம்மா 2வது சீசன் என்ன பண்ணலாம் என அந்த சீரியலின் இயக்குநராஜ பிரவீன் பென்னட் போஸ்ட் போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா 2வது சீசனை எப்படி எடுத்துச் செல்ல போகிறீர்கள்?  யார் நடிக்கிறார்கள் என்றெல்லாம் பேசி வருகின்றனர். அத்தோடு இறுதி நாளில் எடுகப்பட்பட்ட போட்டோவும் வைரலாகி வருகின்றது. இதில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement