• May 19 2024

பெங்களூரு தாக்குதல் சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மனு..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பான் இந்தியா வில்லனாக அசத்தி வரும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்து பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.கடந்தாண்டு நவம்பர் மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் தாக்குதல் நடத்தினார்.அத்தோடு விஜய் சேதுபதி மீதான இந்த அவதூறு வழக்கு விசாரணை இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கும்பலில் ஒருவராகவும் சினிமாவில் முகம் காட்டிய விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா ஸ்டாராக கெத்து காட்டி வருகிறார். சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, இப்போது கதாநாயகன், வில்லன், கேமியோ ரோல் என எந்த கேரக்டராக இருந்தாலும் அதகளம் செய்து வருகிறார். விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என அனைத்து திரைத்துறையும் வெயிட்டிங்கில் உள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்தாண்டு மட்டும் தமிழில் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் ஆகிய படங்கள் வெளியாகி மாஸ் காட்டியது.


இவ்வாறுஇருக்கையில்  கடந்தாண்டு பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து விஜய் சேதுபதியை ஓருவர் தாக்கியிருந்தார். விஜய் சேதுபதியும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவரும் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி பெங்களூர் ஏர்போர்ட்டில் பரஸ்பரம் தாக்கி கொண்டனர். 

முதலில் யார் தாக்கிக் கொண்டார்கள் என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. எனினும் இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி மீது குற்ற அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி மனு தாக்கல் செய்தார்.




மேலும்  இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றம், விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம் என்று கூறியது. மேலும், அந்த விசாரணையை 3 மாத காலங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஜூலை 29ம் தேதி உத்தரவிட்டிருந்தது. .

அதேநேரம், இந்த விவகாரமானது, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல. எனவே, இங்கு வழக்கு தொடர இயலாதென தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான தாக்குதல் புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இதனால், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலேயே விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறுஇருக்கையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் விஜய் சேதுபதி.














Advertisement

Advertisement