• Jun 04 2023

அதிரடி காட்டிய நடிகை லக்‌ஷ்மி மஞ்சு..வெளியான வீடியோவால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் என்று பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அத்தோடு இந்திய சினிமாவையும் தாண்டி ஆங்கில சினிமாவிலும் கால் பதித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

எனினும் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் லக்‌ஷ்மி மஞ்சு, இன்னும் தலைப்பு வைக்காத திரைப்படம் ஒன்றில் அதிரடி நாயகியாக நடித்து வருகிறார். அதிரடியான சாகச சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.அத்தோடு இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் எந்தவித டூப்பும் போடாமல் ஒரிஜினலாக அவரே நடித்து வருவது படக்குழுவினரை வியக்க வைத்துள்ளது.


இந்த படத்திற்காக சமீபத்தில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றில், நடிகை லக்‌ஷ்மி மஞ்சு, அந்தரத்தில் பறந்தபடி சண்டையிடும் காட்சி ஒன்றில் எந்தவித டூப்பும் இல்லாமல், ரோப் மூலம் ஒரிஜினலாக அந்தரத்தில் பறந்தபடி நடித்திருக்கிறார். 

லக்‌ஷ்மி மஞ்சுவின் ஈடுபாட்டை பார்த்து படக்குழு வியந்து பாராட்டி வரும் நிலையில், அவருடைய சண்டைக்காட்சியின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அத்தோடு அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருவதோடு, திரையுலகினர் பலர் லக்‌ஷ்மி மஞ்சுவின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.


அத்தோடு, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், தனது தந்தையுமான மோகன் பாபுவுடன் இணைந்து லக்‌ஷ்மி மஞ்சு நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement