• May 29 2023

பொன்னியின் செல்வன் 2 படத்தில் சிறு வயது ஆதித்ய கரிகாலனாக மிரட்டியிருக்கும் நடிகர் யார் தெரியுமா?- வெளியாகிய கிளிக்ஸ்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் 2 . 

இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால் இரு தினங்களிலேயே படத்தின் வசூல் 150 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 


பொன்னியின் செல்வன் 2 படத்தில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் தான்.இந்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்த நடிகர் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.


அவருடைய பெயர் சந்தோஷ். குறிப்பாக இரண்டாம் பாகத்தின் துவக்க காட்சியில் நடிகர் சந்தோஷின் நடிப்பு பாராட்டக்குரியதாக இருக்கும்.இந்நிலையில், அவருடைய புகைப்படங்கள் சில தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement