• Jan 19 2025

பரோட்டா காமெடி ஜெயம் ரவி படத்தில் இருந்து தூக்கப்பட்டதா? வெளியான சீக்ரெட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்து, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி முன்னேறி வந்தவர் தான் நடிகர் சூரி. தற்போது காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் பிரபல ஹீரோக்களுக்கு காமெடியனாக நடித்த சூரி, பெரும்பாலும் கிராமத்து கதைகளில் தான் நடித்திருப்பார். பல இயக்குனர்களும் அவரின் முகத்தை கிராமத்து கதைக்கு செட்டாகும் விதத்தில் பயன்படுத்தி இருந்தார்கள்.

மனம் கொத்திப் பறவை படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கும் நடிகர் சூரிக்கும் நட்பு வளர்ந்தது. இதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தார்.


அதன் பின்பு விஜய், அஜித், சூர்யா போன்ற பிரபல நடிகர்களின் படங்களிலும் காமெடியில் அசத்தி  இருந்தார் சூரி. எனினும் இவருக்கு பெயர் பெற்று கொடுத்த காமெடி என்றால் அது வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி தான். இதைத் தொடர்ந்து அவர் பரோட்டா சூரியென அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது இயக்குனர் எழில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில், ஜெயம் ரவியை வைத்து தீபாவளி படம் எடுத்த போது அந்த படத்தில் நான் வைக்க ஆசைப்பட்ட காமெடி தான் அந்த பரோட்டா காமெடி கதை. ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அந்த படத்தை எடுத்த எனது உதவி இயக்குனரான சுசீந்திரன், என்னை தொடர்பு கொண்டு அந்த காமெடியை எடுக்கட்டுமா? என கேட்டார். நானும் காமெடியை கொடுக்காமல் எடு என்று சொன்னேன். ஆனாலும் அந்த காட்சி மிக அருமையாக இயக்கி இருந்தார் சுசீந்திரன் என தற்போது கூறியுள்ளார்.

Advertisement

Advertisement