• Jan 19 2025

நானும் மதுரைக்கார பொண்ணு தான்.. ‘மகாநதி’ சீரியலில் எண்ட்ரியாகிய நடிகை பெருமிதம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடித்து கொண்டிருந்த நடிகை திவ்யா திடீரென டெங்கு காய்ச்சல் காரணமாக படப்பிடிப்புக்கு வர முடியாத நிலையில் அந்த தொடரில் இருந்து விலகியதாக சமீபத்தில் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கங்கா கேரக்டரில் தற்போது ’சிங்க பெண்ணே’ தொடரில் ஜெயந்தி கேரக்டரில் நடிக்கும் தாரணி என்பவர் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி தான். இந்த நிலையில் நடிகை தாரணி தான் மதுரைக்கார பொண்ணு   என சமீபத்தில் அளித்த பேட்டியில் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

’சிங்க பெண்ணே’ தொடரில் ஜெயந்தி என்ற கேரக்டரில் நடித்து வரும் தாரணி, சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தாலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய நிலையில் தற்போது அவருக்கு ‘மகாநதி’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தி தொடர்ந்து லீட் கேரக்டரில் நடிப்பேன் என்றும் அது தான் எனது கனவு என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



தமிழ் சீரியலை பொருத்தவரை தமிழ்நாட்டுப் பெண்கள் பெரிய அளவில் லீடாக நடிக்க முடியவில்லை என்றும் ஒரு நாள் நானும் லீடாக நடித்து எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

நான் மதுரைக்கார பொண்ணு என்று கூறியவுடன், மதுரைக்கார பொண்ணு எப்படி மீடியாவில் என்று கேட்கிறார்கள், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, எல்லோருக்கும் என் செயல் பதில் சொல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்து வரும் கோமதி பிரியாவும் மதுரைக்கார பொண்ணு என்ற நிலையில் தற்போது ‘மகாநதி’ சீரியலில் நடிக்கும் தாரணியும் மதுரைக்கார பொண்ணு என்பதால் மதுரைக்கார பெண்கள் சீரியல்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement