• Nov 02 2024

விஜய்யால் ஏமாந்து போன அட்லி.. அஜித்திடம் சரணடைய முடிவா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

 இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க அட்லி எவ்வளவோ முயற்சி செய்தும் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க  அவர் வாக்குறுதி கொடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து ஜவான் படத்தை முடித்த பிறகு  ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படம் உலகம் முழுவதும் 3000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று அட்லி ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இந்த படத்திற்கான கதை எழுதும் பணியில் அட்லி இருந்த நிலையில்தான் திடீரென விஜய் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்தது அட்லிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.  



விஜய் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டதால்  அட்லி படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்பதால் ஷாருக்கான் மற்றும் விஜய்க்காக அவர் எழுதிய கதையில்  விஜய் நடிக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்க அஜித்திடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் ஒருவேளை அஜித் ஒப்புக் கொண்டால் ஷாருக்கான் மற்றும் அஜித் நடிக்கும் படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

 ஏற்கனவே ஷாருக்கான் மற்றும் அஜித் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ள நிலையில் மீண்டும் இணைவார்களா? அந்த படத்தை அட்லி இயக்குவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement