• May 18 2024

அது கிடக்குது லூசு... தனலட்சுமிக்காக பிக்பாஸ் ரசிகர்கள் தயாரித்த குறும்படம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.


இந்நிலையில் மக்கள் போட்டியாளர் என்கிற அங்கீகாரத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த டிக் டாக் பிரபலமான தனலட்சுமி 3ஆவது நாளிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க செமையாக விளையாடி வருகிறார். பல ஆண் போட்டியாளர்கள் அமைதியாக இருக்க இறங்கி அடித்து விளையாடிய தனலட்சுமிக்கு எதிராக ஜிபி முத்து ஆர்மி திரண்டு விட்டது.


அதாவது முதல் சீசனில் ஜூலியை பார்த்து ரசிகர்கள் எப்படி இரிடேட் ஆனார்களோ, கடந்த சீசனில் அபிஷேக் ராஜாவை பார்த்ததும் எப்படி இரிடேட் ஆனார்களோ அதே போல இந்த சீசனிலும் தனலட்சுமியை பார்த்ததும் இரிடேட் ஆகி வருகின்றனர்.

ஆனால், மற்ற போட்டியாளர்களை போல அமைதியாக இல்லாமல், இப்படி விளையாடினால் தான் நிகழ்ச்சி இண்ட்ரஸ்டிங்காக மாறும் என நினைத்து விறுவிறுப்பாக விளையாடி வரும் தனலட்சுமிக்கும் ஆதரவு கிடைக்க ஆரம்பித்துள்ளது.

எனினும் தனலட்சுமி ஜிபி முத்துவை மரியாதைக் குறைவாக பேசி விட்டதாக சர்ச்சைகளும் கிளம்பி விட்டன. மேலும் "பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டால், அனைவரும் போட்டியாளர்கள் தான் என்றாலும், ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, தம்பி, அண்ணன், அக்கா என இருப்பதை போலத்தான் இங்கேயும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வயதிலும் போட்டியாளர்களை அனுப்புகின்றனர். ஆனால், நீங்க அப்பா மாதிரி இருக்கும் ஜிபி முத்துவை இப்படி மரியாதை இல்லாமல் பேசலாமா" என ஜனனி கேட்க மேலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.


இந்நிலையில் உடனடியாக "அவன் இவன் என்றோ ஜிபி முத்துவை பற்றி மரியாதைக் குறைவாக ஒரு வார்த்தை கூட தான் பேசவில்லை" என வாதம் செய்த தனலட்சுமிக்கு ரசிகர்கள் வெயிட் எலிமினிட் என கூறும் வகையில் சூப்பரான ஒரு குறும்படத்தை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.


அதாவது ஜிபி முத்து பற்றி பேசும் போது "அது கிடக்குது லூசுன்னு" தனலட்சுமி பேசிய வீடியோ க்ளிப்பை எடிட் செய்து குறும்படமாக ரசிகர்கள் தாங்களே போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். இப்படியே பிரச்சனை முத்திப் போய் முதல் வாரத்திலேயே தனலட்சுமியை வெளியேற வைத்து விடுவார்களோ என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாது முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் எந்தவொரு பஞ்சாயத்தும் இல்லை என்றால் நிகழ்ச்சி போர் அடித்து விடும். ஆனால் தற்போது ஜிபி முத்து - தனலட்சுமி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த சீசனிலும் கமலுக்கு சரியான வேட்டை தான் என்று கூறி ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement