தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்தை அடுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் தங்களுடைய புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு இருவரும் இணைந்து ரொமாண்டிக்கான போட்டோஸ் வெளியிட்டுள்ளனர். அவை ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.


                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!