• Sep 13 2024

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் எங்கு, எப்போது தெரியுமா?வைரலாகும் அழைப்பிதழ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்த, அசோக் செல்வன்.அந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன் சேர்ந்து ரகளை செய்து இருப்பார். 


தொடர்ந்து அசோக் செல்வன், பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே போன்ற தரமான கதை அம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளார்சமீபத்தில் இவர் நடித்த போர் தொழில் பெரும் வரவேற்பை பெற்றது.


இந்நிலையில்,அசோக் செல்வன், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. இருவரும் ப்ளு ஸ்டார் என்ற கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படத்தில் சேர்ந்து நடித்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.


இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால், அடுத்த மாதம் 13ந் தேதி திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.. இவர்களின் திருமணம் அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement