• May 18 2024

பூஜையுடன் ஆரம்பமாகியது ஆர்யாவின் புதுப்பட ஷூட்டிங் - என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் பாணியில் படு மிரட்டலாக ஆர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம்  கேப்டன். இ ந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஆர்யாவின் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.அந்த வகையில் ஆர்யா இயக்குனர் முத்தையாவுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.

கிராமத்து கதைகளில் அதிக ஆர்வம் காட்டும் முத்தையா சமீபத்தில் விருமன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி, அதிதி சங்கர் நடித்திருந்த அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


அதைத்தொடர்ந்து தற்போது அவர் ஆர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சித்தி இதானி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படி மெகா கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாக இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முத்தையாவின் பாணியில் இந்த திரைப்படமும் பக்கா கிராமத்து கதையாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்யா இந்த படத்தில் முரட்டு கிராமத்தானக கலக்குவார் என்று தெரிகிறது.


இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கு இந்த படம் வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இப்படத்தின் சூட்டிங் பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது.அதில் முத்தையா, ஆர்யா, சித்தி இதானி, சாண்டி மாஸ்டர் உட்பட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.













Advertisement

Advertisement