• May 12 2024

"ஆரம்பத்தில கொடுக்கல, இப்போ கொடுக்கிறாங்க"... உணர்ச்சிபூர்வமாகப் பேசிய ஆர்யா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன்'. இப்படமானது வருகிற 8-ஆம் திகதி வெளியாக இருக்கின்றது. இந்தநிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கின்றார். அதில் அவர் பேசிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அதாவது ஆரம்பத்தில் இப்படம் பற்றி பேசிய ஆர்யா "க்ரீச்சர் வைச்சு படம் எடுத்திருக்கோம். அதனால இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இந்த ஸ்டோரியில் இருக்கும் எமோஷன் எல்லாமே நல்ல இருக்கும். அத்தோடு இந்த படத்தில் 2 பாடல்கள் இருக்கின்றன" எனக் கூறியிருக்கார். 


அத்தோடு பழைய படமான 'பிரிடேட்டர்' அதைப் போல உங்க படத்திலேயும் ஏதாச்சு சாரல் இருக்கின்றதா என அந்த பேட்டியில் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த நம்ம ஆர்யா "பிரிடேட்டர்' இற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்" எனக் கூறியுள்ளார். 

அடுத்த கேள்வியாக அவரிடம் ப்ரோமோஷன் நிகழ்வுகள் தொடர்பாக கேட்கப்பட்டது. அதாவது தமிழ் சினிமா ஆனது ப்ரமோஷனை பொறுத்த வரையில் சென்னையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். ஆனால் ரீசென்ற் ஆக சென்னையைத் தாண்டி எல்லாம் மக்களை சந்தித்து ப்ரோமோஷன் பண்ணுறீங்க" என்று கூறு கூறியிருந்தார்கள்.


இதற்கு உடனே ஆர்யா "இது ஒரு நல்ல விஷயம் தான், நான் இதற்கு முன்னாடி மதராசபட்டினம் 2009 இல் வந்தேன், அதற்கு அப்புறமாக 2015 இல் 'புறம்போக்கு' படத்திலும் வந்திருந்தேன், எனினும் லாஸ்ட் 5வருடமாக எனக்குத் தெரிஞ்சு இந்தமாதிரிப் ப்ரோமோஷன் எல்லாம் ரொம்பக் கம்மியாகிடிச்சு. அதிலும் குறிப்பாக கோவிட் காலத்தில் ரொம்பவே குறைஞ்சிடுச்சு" எனக் கூறியிருந்தார்.

மேலும் "இந்தப் புரொமோஷன் வந்து 'கிரவுண்ட் ப்ரோமோஷன்' எண்டு சொல்லலாம். ஹிந்தியில் எல்லாம் பயங்கரமாக பண்ணுவாங்க, அவங்க இந்தியாவில் இருக்கிற எல்லா நகரங்களுக்கும் போய்ட்டே இருப்பாங்க. ஆனால் நமக்கு வந்து அட்லீஸ்ட் நம்ம தமிழ்நாட்டையே கவர் பண்ணினால் கூட அதுவே ஒரு பெரிய டிஸ்டெண்ட் தான்" எனவும் சுவாரஸ்யமாக கூறிருந்தார்.

அத்தோடு "படத்தோட வெற்றியே வசூல் தான் எனவும் கூறியிருக்கார், அத்தோடு OTT மற்றும் திரையரங்கு இரண்டுமே தேவை எனவும் கூறியிருக்காரு.

அத்தோடு இளைஞர்களுக்கு அட்வைஸ் கூறும் விதத்தில் "எமக்கு எதிலே அதிகளவு சுவாரஸ்யம் இருக்கோ நாம அதை நோக்கிப் போய்ட்டு இருக்க வேண்டும், அத்தோடு போதையை தவிர்ப்பதற்காக கேம் விளையாடுங்க அப்போ உங்களுக்கு டைம் போறது தெரியாது" எனவும் கூறியிருக்கின்றார் ஆர்யா.


அதுமட்டுமல்லாது தற்போது ஆர்யாவிற்கு 'ராஜாராணி' படத்திற்காக தமிழக அரசு விருது கிடைத்திருக்கின்றது. அத்தோடு காதல் இளவரசன் என்ற பட்டமும் இவருக்குத்தான் இருக்கின்றது. இது தொடர்பாக நம்ம ஆர்யா கூறுகையில் "இந்த கூட்டணியில் மறுபடியும் இணைய சான்ஸ் கிடைக்கும் எனவும், எல்லாருக்குமே ஒரு தூண்டுதல் தேவை எனவும் கூறியிருக்கின்றார்.

மேலும் இந்த விருது தொடர்பாக அவர் கூறுகையில், இவ்வாறு விருது கொடுத்து தமிழக அரசு ஊக்குவிப்பது தனக்கு ரொம்ப சந்தோசமாக இருப்பதாகவும், சில வருஷங்களுக்கு முன்னாடி கொடுக்கல ஆனால் இப்போ கொடுக்கிறாங்க, இனிமேல் இதைவிட ஜாஸ்தியாக பண்ணுவாங்க என்று தான் நம்புவதாகவும் மிகவும் உணர்ச்சி வசமாக மனம் திறந்து கூறியிருக்கின்றார்.


அத்தோடு "கேப்டன் படம் செப்டெம்பர் 8 வெளியாகுவதாகவும், இந்தப்படம் பேமிலி என்டர்ரைனர் ஆக இருப்பதாகவும், அதனால் அனைவரும் குடும்பத்தோடு சென்று படத்தை பார்த்து என்ஜோய்பண்ணுங்க" எனவும் கூறி அந்த பேட்டியை மிகவும் சந்தோசமாக நிறைவு செய்திருக்காரு நம்ம ஆர்யா.

Advertisement

Advertisement

Advertisement