• Sep 21 2023

கையும் களவுமாக பிடிபட்ட அர்ஜுன்... உண்மையை நிரூபிக்கப் போகும் வசு... மொபைலில் சிக்கிய ஆதாரம்..? சூடுபிடிக்கும் 'Thamizhum Saraswathiyum' promo..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியானது எப்போதுமே சீரியலுக்குப் பேர் போன ஒரு சேனல் தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் 'தமிழும் சரஸ்வதியும்'. 


இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் வசு "ஒருத்தன் தப்பு செய்தால் அதற்கான ப்ரூவ்  கண்டிப்பாக அவன் மொபைலில் இருக்கும், அர்ஜுனோட மொபைலை எப்படியாவது நாம எடுக்கணும்" என கோதையிடமும் நடேசனிடமும் கூறுகின்றார்.


பின்னர் எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வசு தன்னுடைய மொபைலை அர்ஜுனிற்கு அருகில் வைத்து விட்டு அர்ஜுனின் மொபைலை எடுக்கின்றார். எடுத்து அதில் உள்ள எல்லாவற்றையும் லாப்டாப்பில் போட்டு ஆராய்கின்றார்.


பின்னர் அர்ஜுனின் அக்கா, மாமா போன்அடிக்கும் போது நீ ஏன் எடுக்கல என அர்ஜுனிடம் கேட்கின்றார். பதிலுக்கு அர்ஜுன் மேல சார்ஜ் போட்டிருப்பதாக கூறுகின்றார். பின்னர் அவரும் மேலே போனை எடுப்பதற்காக செல்கின்றார்.


இதனைத் தொடர்ந்து நடேசன், கோதைக்கு அருகில் வந்த வசு எல்லா எவிடேன்ஸும் எடுத்து விட்டது போல் கை காட்டுகின்றார்.  இதனால் கோதையும் நடேசனும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். எனவே இதன் மூலமாக அர்ஜுன் கையும் களவுமாக பிடிபட்டு விட்டார் என்பது தெளிவாகிறது. 


Advertisement

Advertisement

Advertisement