• May 11 2024

லியோ படத்தின் நா ரெடி பாடலுக்கு சூப்பரான ஆட்டம் போட்ட அர்ச்சனாவின் மகள் சாரா- வைரலாகும் வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஏராளமான நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது, அதனை தொடர்ந்து சென்னையிலேயே படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விஜய் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.


படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகிவிட்டது.விஜய்யின் லியோ பட நா ரெடி பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வரும் நிலையில் தற்பொழுது  தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா நா ரெடி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடன வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


மேலும் நா ரெடி பாடல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றது.லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement