• Jan 19 2025

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரின் மகள் காலமானார்! பேரதிர்ச்சியில் பிரபலங்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்பட்டவர் தான் எம்கே தியாகராஜ பாகவதர். தனது குரல் வளத்தின் திறமையால் 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்நாட்டையே தம் வசம் வளைத்துப் போட்டிருந்தார்.

1959 ஆம் ஆண்டில் மறைந்த தியாகராஜா பாகவத்திற்கு மூன்று பிள்ளைகள் காணப்பட்டனர். அதில், மகனான ரவீந்திரன் மற்றும் மகளான சரோஜா, சுசிலா  ஆகியோர் காணப்பட்டனர். 


எனினும் அதில் ரவீந்திரன் மற்றும் சரோஜா ஆகிய இருவரும் ஏற்கனவே காலமான நிலையில். தற்போது மற்றொரு மகளான சுசீலாவும் தனது 89வது  வயதில் காலமாகியுள்ளார்.

இவ்வாறு கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். தற்போது இவரது மறைவிற்கு திரையுலகினர் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement