கடந்த மாதம் மூன்றாம் தேதி வெளியான ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 30 கோடி என்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூல் செய்த ’அரண்மனை 4’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
’அரண்மனை 4’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த படத்தை ஜூன் 21ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. 
தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அரண்மனை 4’ திரைப்படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் குறிப்பாக இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகமாக தியேட்டருக்கு வந்ததால் ஓடிடியில் குடும்பத்தோடு படத்தை பார்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, ராமச்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.   ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Oru semma Family entertainer!
Aranmanai 4 Streaming From June 21 On Disney +Hotstar#Aranmanai4 #StreamingFromJune21 #DisneyplusHotstar #Disneyplushotstartamil pic.twitter.com/9rz8wBBqNx
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!