• Jan 18 2025

அம்பானி வீட்டு விசேஷத்தில் அரங்கேறிய சம்பவம்! ராம்சரணை கலாய்த்தாரா ஷாருக்கான்! விளாசி தள்ளும் ரசிகர்கள்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் நடிகர்கள் பெரும் கூட்டமாகவும் தென்னிந்தியாவிலிருந்து ரஜினிகாந்த், அட்லி மற்றும் ராம்சரண் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.


அந்த நிகழ்வில் பல பிரபலங்களில் நிகழ்வுகள் அரங்கேறி இருந்தது. அதில் நாட்டுக்கூத்து பாடலின் இந்தி வெர்ஷனில் பாலிவுட் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாருக் கான் மற்றும் அமீர்கான் மூவரும் மேடை ஏறி நடனம் ஆடினார்கள். அப்போது ஷாருக் கான் ராம் சரண் மேடைக்கு வருமாறு அழைத்தார். இட்லி சாப்பிட்டது போதும் மேடைக்கு வாங்க ராம்சரண் என ஷாருக்கான் அழைத்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.


மேலும் இது தொடர்பாக, ராம்சரண் மனைவி உபாசனாவின் மேக் அப் ஆர்ட்டிஸ்ட்டான ஜெபா ஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராம் சரணை இப்படி அசிங்கப்படுத்தி இருக்க கூடாது. அதற்குப் பின் அங்கிருந்து நான் கிளம்பி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.


ஷாருக்கான் அழைத்ததும் ராம்சரண் மேடையேறி சந்தோசமாக மூன்று கான்களுக்கு நடுவே நாட்டுக்கூத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போதுதான் அவரது நடனத்தைப் பார்த்து ஷாருக்கான் தலைவணங்கி செய்த செய்கையை யாரும் கவனிக்கலையா, அவர்கள் நட்பு ரீதியாக கலாய்த்துக் கொள்வது எல்லாம் சர்ச்சையாக வேண்டாம் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement