• May 11 2024

மீண்டும் வேற லெவலில் சாதனையைக் குவித்து வரும் அரபிக்குத்து பாடல்-ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!



கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டன் என்னும் படத்தையும் இயக்கியிருந்தார்.

இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்துள்ளது. மேலும் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. 

குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது. அரபிக் குத்து வீடியோ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.


இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து வீடியோ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement