• May 08 2024

திடீரென முடிவுக்கு வருகிறது மற்றுமோர் ஹிட் சீரியல்... வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சீரியல்களுக்கு பேர் போன ஒரு தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உண்டு. அதுமட்டுமல்லாது இந்த சீரியல்கள் டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது.

மேலும் இதில் பழைய சீரியல்கள் பல முடிவுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் ஏற்கெனவே சன் டிவியில் ஒரு டாப் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டது. அது எந்தத் தொடர் என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்திருந்தனர். தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.


அது வேறுஎந்த தொடரும் இல்லை 'கண்ணான கண்ணே' தொடர் தான். 2001 இல் தொடங்கப்பட்ட இந்தத் தொடரானது இன்றுவரை வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது. தன்னுடைய தந்தையின் அன்பை பெற ஏங்கும் மீரா கேரக்டரில் நிமேஷிகா இந்தத் தொடரில் கலக்கி வருகிறார்.

இவ்வாறு அப்பா-மகள் பாசத்தை உணர்த்தும் இந்த தொடர் ஆனது விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement